கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

ByEditor 2

Feb 20, 2025

கிளிநொச்சி – முகமாலை வடக்கு ஏ9 வீதியில் வியாபார நிலையம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

பெற்றோல் குண்டு தாக்குதல் நேற்று (19) நள்ளிரவு 12.30 மணி அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு | Petrol Bomb Thrown At A Shop In Tamil Area

அதேவேளை குறிந்த கடையின் மீது 2020 ஆண்டில் கழிவு எண்ணெய் வீசப்பட்டதுடன், 2021 ஆம் ஆண்டில் மூகமூடி அணிந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்களால் இரும்புக்கம்பி கொண்டு கடையின் சொத்துக்கள் அடித்து உடைக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களும் தப்பிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் பகுதியில் கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு | Petrol Bomb Thrown At A Shop In Tamil Area

இந்நிலையில், நேற்று இரவு மூன்றாவது தடவையாக குறித்த கடை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *