எல்ல நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் செல்பி எடுக்கும் நோக்கில் மிதிபலகையில் பயணித்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் பொடிமணிக்கே ரயிலில் பயணித்த ரஷ்ய நாட்டு பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் நாட்டிற்கு வந்திருந்தார்.
ரஷ்ய பெண் பலி
இந்த நிலையில் இன்று காலை பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த பொடிமணிகே ரயில், எல்ல நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
உயிரிழந்த பெண் 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.