ரயிலில் மோதி, ஆறு யானைகள் உயிரிழப்பு

ByEditor 2

Feb 20, 2025

ட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா புகையிரதத்தில் காட்டு யானைகள் மோதி இடம்பெற்ற விபத்தில் 6 யானைகள் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்லோயா புகையிரத நிலையத்துக்கு அருகே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மேலும் இரு யானைகள் காயமடைந்துள்ளன.

விபத்தின் காரணமாக அந்த பிரதேசத்தில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுள்ளதாக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விபத்து இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *