விஜயின் கட்சிக்கு கிடைத்த மற்றுமொரு கட்சியின் ஆதரவு

ByEditor 2

Feb 19, 2025

தென்னிந்திய நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய் கட்சி தொடங்கி தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், அவரின் கட்சிக்கு கிடைத்த முதல் ஆதரவு இதுவாகும்.

மாவட்டத் தலைவர்களின் நியமனம் மற்றும் கட்சியின் அணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு

முன்னதாக, தங்கள் கட்சியுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும் என விஜய் அறிவித்திருந்தார்.

விஜயின் கட்சிக்கு முதன்முதலாக கிடைத்த மற்றுமொரு கட்சியின் ஆதரவு | Muslim League Supports Vijay S Tvk Tamil Nadu

இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து செயற்படும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *