கப்ருக சமூக வலுவூட்டல் திட்டம் – கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பம்

ByEditor 2

Feb 19, 2025

தெங்கு பயிர்ச் செய்கையில் தற்போது நிலவும் சவால்களை எதிர்கொள்ளும்; தேசிய தேவைக்கு ஏற்ப, நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்பட்டு வரும் கப்ருக சங்கங்களை மறுசீரமைத்து அதிகாரமளிப்பதற்கான விசேட திட்டத் தொடரின் முதல் நிகழ்ச்சித்திட்டம் இன்று (19) கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, ஆரம்ப நிகழ்வு இன்று (19) காலை 9.00 மணிக்கு படுவத்த, நாரங்கொடபாலுவவில் உள்ள ரத்ன ஸ்ரீ கனராம பொத்குல் விகாரையில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த திட்டத்துடன் இணைந்து தென்னை உற்பத்தி மற்றும் தென்னை சார்ந்த சிறு தொழில்களில் தொழில்நுட்ப அறிவு மற்றும் சங்க உறுப்பினர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் என்பன இன்று முதல் செயல்படுத்தப்படும்.

உற்பத்திக்கு உள்ளீடுகளை வழங்குதல், உற்பத்தி செய்தல் மற்றும் தயாரிப்பு சந்தைப்படுத்தல் தொடர்புகளை ஏற்படுத்துதல் என்பன கப்ருக சங்க வலையமைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.

கப்ருக நிதி முகாமைத்துவ சபை மற்றும் கம்பஹா மாவட்ட தெங்கு உற்பத்தி சபையின்; பிராந்திய அலுவலகம் என்பன இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *