சவூதியின் ஏற்பாட்டில் – கண் பார்வை நோய்களுக்கு சிகிச்சை

ByEditor 2

Feb 18, 2025

சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான சிறப்பான உறவுகளின் அடிப்படையிலும், உலகம் முழுவதிலும் உள்ள குறைந்த வருமானம் பெரும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்க  சவூதி அரேபியா அரசு மேற்கொள்ளும் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையிலும், மற்றும் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம், இலங்கையில் மேற்கொள்ளும் மனிதாபிமானப் பணிகளின் தொடராக, இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள “காத்தான்குடி” அரச மருத்துவமனையில் கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் தன்னார்வத் திட்டம் ஒன்றை இம்மாதம் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தியது.  

இத்திட்டத்தினூடாக பல ஆயிரக்கணக்கான நோயாளர்களைப் பரிசோதித்தல், அவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, தேவைப்படுமிடத்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளல் , தேவையான மருந்துகளை வழங்குதல், வெண்படலங்களை அகற்றுதல், கண்ணீர் குழாய்களில் ஏற்படும் தடுப்புக்களுக்குச் சிகிச்சையளித்தல், நோயாளிகளுக்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றை வழங்குதல் என்பன இடம்பெறும். 

இத்திட்டத்தின் ஊடக பின்வரும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன:

o மருத்துவ பரிசோதனைகள்: 4484

o கண்ணாடி விநியோகம்: 974

o அறுவை சிகிச்சைகள்: 478

மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம், பெப்ரவரி 18 முதல் 23 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், தெற்கு இலங்கையில் உள்ள “வலஸ்முல்ல” பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மற்றொரு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *