இரத்தினபுரி – எஹெலியகொட பொலிஸ் பிரிவில் உள்ள ஹொரகொட வீதியில் நேற்று (17) கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரைக் கொலை செய்து இருவரைப் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஹெலியகொட பொலிஸ் பிரிவில் உள்ள மொரகல சந்திப் பகுதியில் வைத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆண்டாகல பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவராவார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.