யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் மாமனும் மருமகனும் நேற்று (17) மாலை கிணற்றொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வட்டுக்கோட்டை தெற்கு பகுதியினை சேர்ந்த பெருமாள் மகிந்தன் மற்றும் குறித்த நபரின் தங்கை, மனைவி மற்றும் மருமகனான தனுசன் டனுசன் (3 வயது) ஆகியோர் துணவி பகுதிக்கு சென்றுவிட்டு மீள தமது வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
இதன்பொழுது பெருமாள் மகிந்தன் தனது மருமகனான தனுசனை துவிச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு முன்னால் சென்றுள்ளார்.
இந்நிலையில், சற்று நேரம் கழித்து குறித்த வீதியால் வருகை தந்த தங்கை மற்றும் மனைவி வீதியில் நின்ற துவிச்சக்கர வண்டியினை அவதானித்து இருவரையும் தேடியுள்ளனர்.
இந்நிலையில் மூன்று வயது சிறுவன் வயல் கிணற்றில் மிதந்த நிலையில் அவரை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுதும் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
மேலும் குறித்த இடத்திற்கு தொடர்ந்து விரைந்த பொலிஸார் சிறுவனின் தாய் மாமனின் சடலத்தையுமு் கிணற்றிலிருந்து கைப்பற்றி யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சிறுவனின் தாய் மாமன் வயலை காட்டுவதற்கு சிறுவனை அழைத்து சென்றவேளை சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து பின்னர் அவனை காப்பாற்ற குறித்த நபர் கிணற்றில் குதித்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.