கைப்பற்றப்பட்ட பெருந்தொகை துப்பாக்கிகள், தோட்டாக்கள்

ByEditor 2

Feb 18, 2025

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால்  கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் ஹீனடியன பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் நேற்று (17) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவாங்கொடை, ஹீனடியன பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விசேட சுற்றிவளைப்பு

பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், நாடு முழுவதும் பொலிஸாரினால் மேற்கொண்டு வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு இணைந்ததாக வீடொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வீடொன்றில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை துப்பாக்கிகள், தோட்டாக்கள் | Large Quantity Of Guns Bullets Seized

இதன்போது, 9mm ரக தோட்டாக்கள் 47 வும் மற்றும் போர 12 ரக தோட்டாக்கள் 20 வும் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் வீட்டை மேலும் சோதனை செய்தபோது, ​​வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 02 ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகள் மற்றும் 02 வெற்று மெகசின்கள், ஒரு பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 02 வெற்று மெகசின்கள், ஒரு வாகன எண் தகடு மற்றும் காப்பீட்டு அட்டை மற்றும் 03 துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் சீட்டுக்கள் ஆகியவற்றை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *