வெப்பமான வானிலை – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ByEditor 2

Feb 17, 2025

இலங்கையில் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (17) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (18) வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பத்தின் அளவு மனித உடலால் உணரப்படும் எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், முடிந்தவரை நிழலான பகுதிகளில் இருக்க வேண்டும், மேலும் சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் மீது விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *