கம்பளையில் இருந்து கல்முனை நோக்கி வந்த தனியார் பஸ் வண்டியில் வைத்து சுமார் 41 லட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் இரு வர்த்தகர்கள் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காத்தான்குடி பொலிஸார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன் போது பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட 25,420 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.