3 மாதங்களில் அதிகரிக்க போகும் பணவீக்கம்

ByEditor 2

Feb 16, 2025

3 மாதங்களில் அதிகரிக்க போகும் பணவீக்கம்

எதிர்வரும் 3 மாதங்களில் எதிர்பார்க்கப்படும் பணவீக்கத்தில் படிப்படியான அதிகரிப்பு அல்லது நீண்ட கால அதிகரிப்பு ஏற்படக்கூடும் என இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டுக்கான அதன் முதல் நாணயக் கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பணவீக்கம் அதிகரிப்பு

இந்த ஆண்டின் ஜனவரி மாத கணக்கெடுப்பின்படி, அரசாங்க செலவினம் மற்றும் ஊதிய உயர்வு, தனியார் வாகன இறக்குமதி மீதான தடையைத் தளர்த்துவதன் மூலம் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி, உலகளாவிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பண்டிகை மாதங்களில் காணப்படும் அதிகரித்த பொருட்களின் தேவை போன்ற காரணிகளால், எதிர்வரும் 3 மாதங்களில் எதிர்பார்க்கப்படும் பணவீக்கத்தில் படிப்படியான அதிகரிப்பு ஏற்படக்கூடும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதேநேரம், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள், விசேடமாக அமெரிக்காவில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் வெளிநாட்டுத் துறையின் செயல்திறனைப் பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஏற்படும் கொள்கை மாற்றங்கள், இலங்கையின் வெளிநாட்டுத் துறைக்கு முக்கியமாக உலகளாவிய வர்த்தகம், முதலீடு, மூலதன ஓட்டங்கள், பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் இவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *