ஜோன் எஃப் கெனடி படுகொலை குறித்து வெளியான இரகசிய ஆவணங்கள்

ByEditor 2

Feb 15, 2025

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப். கெனடி (John F Kennedy) படுகொலை குறித்து விசாரணை நடத்தி வரும் FBI, கிட்டத்தட்ட 2,400 இரகசிய ஆவணங்கள் கையிருப்பில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கெனடியின் படுகொலை தொடர்பான பல முக்கிய தகவல்கள் அந்த ஆவணங்களில் உள்ளதாக பணியகம் கூறுகிறது.

கெனடி படுகொலை தொடர்பான அரசு கோப்புகள் 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக உத்தரவின்படி இந்த கொலை தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கெனடி படுகொலை தொடர்பான அரசு கோப்புகளை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

முன்னதாக நவம்பர் 22, 1963 அன்று டெக்சாஸின் டல்லாஸில் ஜே.எஃப்.கே படுகொலை செய்யப்பட்டதோடு, கொலைக்கான அதிகார பூர்வ விளக்கங்கள் குறித்து சந்தேகங்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *