மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ByEditor 2

Feb 15, 2025

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு மலையகப் பகுதிகளிலிருந்து கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை இன்று (15)  உயர்வடைந்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,000 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாழ்நிலப் பகுதி மரக்கறிகளின் விலை

இந்நிலையில், தாழ்நிலப் பகுதி மரக்கறிகளின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Vegetables Price In Sri Lanka

ஒரு கிலோ தக்காளி மற்றும் எலுமிச்சையின் மொத்த விலை சுமார் 80 ரூபாயாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், ஒரு கிலோ பாகற்காய் மொத்த விற்பனை விலை 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ கத்தரிக்காய் 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ பீர்க்கங்காயின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையிலும் விற்பனைசெய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *