இராவண எல்ல வனப்பகுதியில் தீ

ByEditor 2

Feb 15, 2025

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராவண எல்ல வனப்பகுதியில் நேற்று (14) இரவு தீ பரவியுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள அதிகளவான நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடினமாக இருந்ததாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

குறித்த வனப்பகுதியில் தனிநபரொருவர் அல்லது குழு ஒன்றினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *