அமெரிக்க யு.எஸ்.எய்ட் தொடர்பில் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு

ByEditor 2

Feb 15, 2025

அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட். நிறுவனத்துடன்  -இலங்கை தொடர்புபடுத்தப்படும் விவகாரம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான தயாசிறி ஜயசேகர,

 அமெரிக்காவின்  யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் கொடுக்கல்  வாங்கல்  தொடர்பில் இலங்கையின்   பெயரை குறிப்பிட்டு சர்வதேச மட்டத்தில் பலவிடயங்கள்  பேசப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு  நாமல் ராஜபக்ஷ உங்களுக்கு எம்.பி.உங்களுக்கு ( சபாநாயகர்)  கடிதம்  மூலமாக வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில்தற்போதைய  பிரதமரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.அது அரசாங்கத்துக்கு நல்லதல்ல, ஆகவே பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படுமா, அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை என்னவென்பதை சபைக்கு அறிவியுங்கள் என்றார்.

 இதற்கு சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன பதிலளிக்கையில், அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட். நிறுவனம் விவகாரம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளேன்  என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *