70 வயதினைப் பூர்த்தியடைந்த முதியவர்களுக்கு கொடுப்பனவு!

ByEditor 2

Feb 14, 2025

அஸ்வெசும குடும்பத்திற்குள் உள்ள 70 வயதினைப் பூர்த்தியடைந்த முதியவர்களுக்கு 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை வழகப்படவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அதன்படி அஸ்வெசும கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கிராம அபிவிருத்தி , சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிவித்துள்ளது.

20 ஆம் திகதி முதல் கொடுப்பனவு

தேவைப்படும் குடும்பங்களில் உள்ள பெரியவர்களைத் தவிர்த்து, இதுவரை உதவித்தொகையைப் பெற்று வரும் பெரியவர்களுக்கு மட்டுமே தபால் மற்றும் துணை தபால் நிலையங்கள் மூலம் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதத்திற்கான உதவித்தொகை மற்றும் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் தபால் மற்றும் துணை தபால் நிலையங்கள் மூலம் செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *