தினமும் 700 கிலோ மீற்றர் விமானத்தில் பயணிக்கும் பெண்

ByEditor 2

Feb 14, 2025

இந்தியாவைச் சேர்ந்த ரேச்சல் கவுர் என்ற பெண் தொழிலுக்காக தினமும் 700 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் செய்வதாக கூறப்படும் செய்தி தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

ரேச்சல் கவுர் மலேசியாவில் உள்ள Air Asia நிறுவனத்தின் நிதி நடவடிக்கைகளில் உதவி மேலாளராக பணிபுரிகிறார்.

இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர் தினமும் அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு பினாங்கு விமான நிலையத்தை அடைவதுடன் அங்கிருந்து 6.30 க்கு கோலாலம்பூர் விமானத்திலிருந்து புறப்பட்டு 7.45 க்கு அலுவலகத்தை சென்றடைகிறார்.

பின்னர் வேலை முடிந்தவுடன் இரவு 8 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு திரும்புகிறார். இவ்வாறு தினமும் அப்பெண் சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் செய்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் , “எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இருவரும் வளர்ந்துவரும் இந்த நேரத்தில் ஒரு தாயாக அவர்களுடன் இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.

அதனால், வாரத்தில் 5 நாட்கள் இவ்வாறு வேலைக்குச் சென்று வருகிறேன். இதனால், என்னுடைய குழந்தைகளோடு தினமும் நேரத்தை செலவிட முடிகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சென்றுவருவதன் மூலம், தனது தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழில் வாழ்க்கையையும் சிறப்பாக கொண்டு செல்ல முடிகிறது எனவும் அவர் கூறியுள்ளார் ஆரம்பத்தில் கோலாலம்பூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த போது மாதம் 41,000 ரூபாய் செலவானது.

ஆனால், தற்போது பயணச் செலவு 27,000 ரூபாய் மட்டுமே செலவாகிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *