ஒரே இலக்கத் தகடு எண்ணுடன் பயணித்த இரண்டு கார்

ByEditor 2

Feb 13, 2025

ஒரே இலக்கத் தகடு எண்ணுடன் பயணித்த இரண்டு கார்களை வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

தெஹிவளை, களனி மற்றும் தலுகம பகுதிகளில் சுற்றித் திரிவதாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து, நேற்று (12) நடத்தப்பட்ட சோதனையின் போது ​ஒரே பதிவு எண்ணைக் கொண்ட இரண்டு டொயோட்டா பிரியஸ் கார்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அரசு பகுப்பாய்வாளரால் பரிசோதிக்க உத்தரவு

வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் தயாரித்த ஒரு நுணுக்கமான திட்டத்தை செயல்படுத்தியதன் ஊடாக குறித்த கார்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதில் ஒரு கார் தெஹிவளை முஹுது மாவத்தையில் ரயில் நிலையத்திற்கு அருகிலும், மற்றொன்று தலுகமவின் முதியன்சேகே வத்த பகுதியிலும் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட கார்கள் மேலதிக விசாரணைக்காக வாகனங்கள் தற்போது தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு வாகனங்களில் எது போலியானது என்பதைக் கண்டறிந்து, அதை அரசு பகுப்பாய்வாளரால் பரிசோதிக்க உத்தரவுகளைப் பெறுவதற்காக இன்று (13) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதேவேளை, தலங்கம பகுதியில் போலியான இலக்கத் தகடுகளுடன் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் ஒன்று இயக்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, செயல்பட்ட வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர், நேற்று (12) அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *