நாடு திரும்பினார் ஜனாதிபதி

ByEditor 2

Feb 13, 2025

 ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று(13) காலை நாடு திரும்பியுள்ளார். 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அங்கு சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பல அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், நேற்று (02) மாலை உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றியிருந்தார்.

உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர் செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை தட்டிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி , தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க நாங்கள் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *