நாளைய தினம் (14) கொண்டாடப்படவுள்ள காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’ என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் என்று அழைக்கப்படுகிறது, இது உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் கொண்டாடப்படும் காதல் நாளாகும். இப்போதெல்லாம், இந்த நாள் காதலைக் கொண்டாடும் நாளாக மட்டுமல்லாமல், பல சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் நாளாகவும் பதிவாகியுள்ளது.
பல குற்றவாளிகளும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்களும் இந்த நாளை இளம் உயிர்களைப் பறிக்க ஒரு பொறியாகப் பயன்படுத்துகின்றனர். இதற்காக, சட்டவிரோத விருந்துகள், களியாட்டங்களை ஏற்பாடு செய்ய சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் இணைய குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் குறித்து இலங்கை காவல்துறைக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைக்கின்றன.