கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவேன்.. பனாமா மீது படையெடுத்துச் சென்று பனாமாக் கால்வாயைக் கைப்பற்றுவேன்.. கிறின்லான்ட்டை விலைக்கு வாங்குவேன். அல்லது இராணுவத்தை அனுப்பிக் கைப்பற்றுவேன்.. பலஸ்தீனர்களை விரட்டிவிட்டு காசாவை கையகப்படுத்துவேன்… இப்படி டொனல்ட் ட்ரம்ப் மேற்கொண்டுவருகின்ற உரைகள், அறைகூவல்கள், ஒரு ஆபத்தான நிலையை நோக்கி இந்த உலகை இட்டுச்சென்றுகொண்டிருப்பதாகக் கூறுகின்றார்கள் ஆய்வாளர்கள்.