நாடு முழுவதும் தென்னைச் செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக்க நிதியத்தின் முகாமைத்துவக் குழுக்களை மறுசீரமைக்க தென்னைச் செய்கை சபை திட்டமிட்டுள்ளது.
இதன் முதற்கட்ட நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் கலாநிதி சுனிமல் ஜயக்கொடி தெரிவித்தார்.
அதன்படி, இம்மாதம் 25 இலட்சம் தென்னை நாற்றுகள் நடவு செய்ய தயார் நிலையில் உள்ளது.
இந்த மறுசீரமைப்பு கப்ருக்க கடன் திட்டத்துடன் இணங்கி எதிர்வரும் மாதங்களில் அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.