சீன தூதரகத்தால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

ByEditor 2

Feb 10, 2025

வவுனியா மாவட்டத்தில் கடந்த காலத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (09.02) காலை 10மணிக்கு இடம்பெற்றது. 

சீனத்தூரகத்தின் பிரதிப் பிரதானி சூ.யன்வெய் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் 350 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன. 

வடமாகாணத்தில் 2,470 குடும்பங்களுக்கு 6,490 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்படவுள்ளதுடன், அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 350 குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டன. 

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ந.கமலதாசன் மற்றும் சீன தூதரக இடைக்கால பொறுப்பாளர் ஜு யானுவேல், சீன தூதரக அரசியல் பிரிவுத் தலைவர் குயின் லிகோங், மற்றும் சீன தூதரக அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *