ஜனாதிபதி அநுரகுமார ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விஜயம்

ByEditor 2

Feb 10, 2025

இந்த ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (10) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணிக்கிறார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையவுள்ளது.

இந்த விஜயத்தின் போது இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணைத் தலைவரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்க உள்ளார்.

மேலும், மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் இருதரப்பு சந்திப்புகள் நடத்தப்படும்.

இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத்துறைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் பல தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துரையாடவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *