காஷ்மீர் சகோதரர்களுடன் எப்போதும் துணை நிற்போம்

ByEditor 2

Feb 5, 2025

(அஷ்ரப் ஏ சமத்)காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தான் நிபந்தனையற்ற  ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், காஷ்மீர் நட்புறவு தினத்தை ; முன்னிட்டு
கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி ஒன்றை கொழும்பில் உள்ள பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில், பாகிஸ்தான் சமூகத்தினர்,
காஷ்மீர் நலன்விரும்பிகள் மற்றும் இலங்கை ஊடக பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முகமாக, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின்  காஷ்மீர் நட்புறவு தின செய்திகள், முறையே வாசிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முக்கிய பேச்சாளர்களாக திரு. சிராஸ் யூனாஸ் திருமதி சூரியா ரிஸ்வி ஆகியோர்  கலந்து சிறப்பித்தனர்.
பாகிஸ்தான் இசுலாமியக் குடியரசு உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பஹீம்   உல் அஸீஸ் அவர்களின் சொற்பொழிவுடன் கருத்தரங்கு நிறைவு பெற்றது. இதன் போது, கருத்துத்
தெரிவித்த அவர், காஷ்மீர் சகோதர, சகோதரிகளுடன் தோளோடு தோள் நின்று எப்போதும்
துணை நிற்போம் என்று பாகிஸ்தான் அரசு மற்றும் மக்களின் உறுதிப்பாட்டை
வலியுறுத்தினார்
. நிகழ்வின் இறுதியாக, முக்கிய பேச்சாளர்களுக்கு உயர்ஸ்தானிகர் தமது நன்றியினை
தெரிவித்தார்.

இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரில், இந்திய ஆக்கிரமிப்பு  படைகளின் மனித உரிமை மீறல்களை சித்தரிக்கும் படங்கள் இந்நிகழ்வின் புகைப்பட
கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது, இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு  காஷ்மீரின் அழகிய பிரதேசங்கள் மற்றும் இந்திய படைகளின் வன்முறையை வெளிப்படுத்தும்
டிஜிட்டல் வீடியோக்களும் இந்நிகழ்வின் போது காண்பிக்கப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *