நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்க பாரிய அளவு நிதி செலவீடு

ByEditor 2

Feb 5, 2025

மருத்துவ விநியோகப் பிரிவினூடாக அரச வைத்தியசாலைகளுக்கு இன்சுலின் உள்ளிட்ட நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குவதற்காகக் கடந்த ஆண்டு பாரிய அளவு நிதி செலவிடப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

காலி – கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திறைசேரியில் இருந்து வழங்கப்படும் நிதியை அதிகளவில் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் பயன்படுத்துவது எமது பொறுப்பல்ல.

நோயை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *