இன்று இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வத்தளை பிரதேச சபை ஏற்பாட்டில் மிட் லேண்ட் சிட்டி ஸ்கீம் (Midland City Housing Scheme), கெரங்க பொகுன பகுதியில் ஒரு சிறப்பு சிரமதானம் (04.02.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மிட் லேண்ட் சிட்டி ஸ்கீம் பகுதி மக்கள், சர்வதேச மனித உரிமைகள் இயக்கத்தின் துணைத் தலைவரும், லங்கா பேஸ்ஸின் இயக்குனருமான திரு. பாஹிம் மற்றும் திருமதி ஹாஷிபா பாஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சமூகப்பணியில் ஈடுபட்டனர்.
சுத்தமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஒற்றுமையை உறுதிப்படுத்த இந்த முயற்சி மிகுந்த உற்சாகத்துடன் முன்னெடுக்கப்பட்டது.



