தேசிய சுதந்திர தின விழா ஆரம்பம்

ByEditor 2

Feb 4, 2025

77 வது தேசிய சுதந்திர தின விழா கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்பதே இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் கருப்பொருளாகும்.

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை குறைந்த செலவில், அதிக பொது மக்களின் பங்கேற்புடன் நடத்த திட்டமிட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக முப்படை வீரர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அணிவகுப்புக்கு முப்படை கவச வாகனங்களைப் பயன்படுத்தாமலிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *