இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக, பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

ByEditor 2

Feb 3, 2025

காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

இந்த இளைஞன் கடந்த 17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அவரது தந்தை களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், அந்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காணாமல் போன இளைஞர், மகாதெனிய, எலுவாவல, தெனிபிட்டிய பகுதியைச் சேர்ந்த பொல்வத்த கொல்லகே நவோத் கிம்ஹான் என்ற 29 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் சுமார் 5 அடி 5 அங்குல உயரம், மெலிந்த உடல் அமைப்பு, குட்டையான முடி மற்றும் தாடி கொண்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இளைஞன் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கோரியுள்ளனர்.

தொலைபேசி எண்:-

1. தலைமையக பொலிஸ் பாரிசோதகர், பொலிஸ் நிலையம் களுத்துறை தெற்கு :- 071-8591691

2. குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலையம் களுத்துறை தெற்கு:- 071 – 8594360

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *