கண்டி – வத்தேகம நகரத்தில் மீன் வியாபாரி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களை எதிர்வரும் 13ம் திகதி வரை தடுத்து வைக்க தெல்தெனிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் வத்தேகம நகரில் உள்ள மீன் வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 31ம் திகதி தெல்தெனிய நீதிமன்றத்தில் பதில் நீதிபதி சுவர்ணா கரலியத்தை முன் இடம்பெற்ற அடையாள அணி வகுப்பில் சாட்சிகளால் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
மேற்படி சந்தேக நபர்களை எதிர்வரும் 13ம் திகதி, தெல்தெனிய நீதவான் நாலக்க வீரசிங்க முன் ஆஜர்படுத்துமாறும் அது வரை அவர்களை தடுத்து வைக்குமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணி சரத் பிரேமகுமார தலைமையில் சட்டத்தரணிகள் குழு ஒன்று ஆஜராகி இருந்தது.
அதன்படி, வத்தேகம நகரத்தில் உள்ள மீன் வியாபாரி ஒருவர் உற்பட ஏழு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.