மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதி மொஹமட் லபார் தாஹீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய, இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி பந்துல கருணாரத்ன, ஓய்வுக்கு முந்தைய விடுப்பு எடுத்துள்ளதோடு, அதை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.