உடவளவையில் கஞ்சா தோட்டம்; சந்தேக நபர் கைது

ByEditor 2

Feb 2, 2025

உடவளவை வனப்பகுதியில் பயிரிடப்பட்டுவந்த கஞ்சா தோட்டமொன்றை உடவளவை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.

அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, சுமார் 4 அடி உயரம் வரை வளர்க்கப்பட்ட 2,153 கஞ்சா செடிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் தனமல்வில பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *