அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஆலோசனையின்றி
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் எந்தவித திருத்தங்களு மேற்கொள்ளப்படாாட்டாது என நீதி அமைச்சர் ஹர்க்ஷன நாணயக்கார கூறியிருப்பதை இலங்கை உலமா கட்சி வரவேற்பதுடன் இது சம்பந்தமாக அரச தரப்பை சேர்ந்தோர் கருத்து தெரிவிப்பதையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் முப்தி அவர்களால் கௌரவ நீதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,
இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே இலங்கை முஸ்லிம்களின் விவாகம் மற்றும் விவாகரத்துகள் நடை முறைப்படுத்தப்பட்டு வந்துள்ளன.
இச்சட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு எத்தகைய பாதிப்பும் இருந்ததில்லை.
ஆனால் சமீப காலமாக ஐரோப்பிய சிந்தனைகளுக்கும் அவர்களின் பணத்துக்கும் அடிமையான சிலரால முஸ்லிம் திருமண சட்டம் திருத்தப்பட வேண்டும் என குரக் எழுப்பப்பட்டன. இவர்களின் முழு நோக்கமும் இச்சட்டத்தை இல்லாதொழிப்பதுதான்.
இத்தகைய முயற்சிகளுக்கெதிராக அரசியல் கட்சி என்ற வகையில் உலமா கட்சி மட்டுமே குரல் கொடுத்து வருகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நீதி அமைச்சராக இருந்த நேரத்தில்தான் முஸ்லிம் திருமண சட்டம் திருத்தப்பட வேண்டும் என சில முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத பெண்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது ரவூப் ஹக்கீம், இப்போதைய நீதி அமைச்சர் சொல்லியிருப்பது போல் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஆலோசனையின்றி இச்சட்டத்தை திருத்த முடியாது என்று ஒரே வார்த்தையில் சொல்லியிருந்தால் இப்பிரச்சினை அப்போதே முடிந்திருக்கும். ஆனால் ரவூப் ஹக்கீம் அப்பெண்களை தனது அமைச்சுக்கு அழைத்து அவர்களுக்கு ஆதரவு கொடுத்து பேசியதால் உஷாரான அப்பெண்கள் இது விடயத்தை வைத்து அன்றைய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மஹிந்த அரசை முஸ்லிம்கள் வெறுக்கும் அளவு செயற்பட்டனர்.
ரவூப் ஹக்கீமின் இக்கோரிக்கைக்கு அரசு இடம் கொடுக்க வேண்டாம் என நாம் அன்றைய அரசிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இது கிடப்பில் போடப்பட்டது.
ஆனால் மைத்திரியின் ஆட்சியில் மீண்டும் இந்த விடயம் பூதாகரமாக்கப்பட்டது. நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் வரும்போதெல்லாம் மக்களை திசை திருப்ப அரசாங்கங்கள் முஸ்லிம் திருமண சட்டத்தையே தூக்கிப்பிடித்தன. கோட்டாபய ராஜபக்சவும் இதைத்தான் செய்தார். பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத இந்த தனியார் சட்டத்தில் கைவைக்க வேண்டாம் என பல கடிதங்களை அவருக்கு நாம் எழுதினோம்.
அவரும் எமது கோரிக்கையை கேட்கவில்லை. கடைசியில் நாட்டை விட்டு ஓடும் நிலை அவருக்கு வந்தது.
உலமா கட்சியை பொறுத்த வரை முஸ்லிம் திருமண சட்டத்தில் எத்தகைய திருத்தமும் தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடு. தேவைப்பட்டால் காதிமாருக்குரிய தனியான கட்டிடம், அதற்குரிய பௌதிக வளம் ஏற்படுத்துதல், சம்பள அதிகரிப்பு போன்ற ஏற்பாடுகளை செய்யலாம்.
அத்துடன் சில காதிமாரின் ஊழல்களை கட்டுப்படுத்தும் வகையில் காதி நீதிமன்ற நடவடிக்கை நடக்கும் போது சிசிடிவி கமெராவை உபயோகித்து நீதி அமைச்சு கண்காணிக்கலாம் என்ற ஆலோசனையை நாம் முன் வைக்கிறோம்