புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அம்பானி

ByEditor 2

Jan 31, 2025

இங்கிலாந்தின் தென் லண்டனை மையமாகக் கொண்ட சரே அல்லது ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணியின் 49வீத பங்குகளுகளை அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி கொள்வனவு செய்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன்படி, இங்கிலாந்தின், எட்டு அணிகளை கொண்ட ஹன்ட்ரட் (The hundred) லீக் கிரிக்கெட்டில் முதல் தடவையாக, முக்கிய அணி ஒன்றின் வெளிப்புற பங்குதாரராக, இந்தியாவின் அம்பானி குடும்பம் பதிவாகியுள்ளது.

பங்குகளுக்கு அம்பானி நிறுவனம் 

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை நடத்திய நேரடி மூன்று வழி ஏலத்தில் அம்பானி குடும்பம் வெற்றி பெற்று அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த அணியின் பங்குகளுக்கு அம்பானி நிறுவனம் செலுத்த ஒப்புக்கொண்ட விலை தெளிவாக தெரியவில்லை.

எனினும், ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணியினது பங்குகளின் மொத்த பெறுமதி 125 மில்லியன் பவுண்ட்ஸ்கள என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சாம் கரன் தலைமையிலான மற்றும் கஸ் அட்கின்சன் போன்ற இங்கிலாந்து தேசிய அணியின் வீரர்களைக் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி உள்ளடக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *