மறைத்து வைக்கப்பட்ட இரத்தினக் கற்கள்

ByEditor 2

Jan 31, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுமார் ஆறு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரத்தினக் கற்களை எடுத்துச் சென்ற இரண்டு இலங்கைப் பயணிகள் இன்று (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தங்கள் ஆசனவாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த இரத்தினக் கற்களுடன் பசுமைப் மார்க்கத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பேருவளை பகுதியைச் சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரம் தொடர்பான தொழில்களில் ஈடுபட்டுள்ள 45 மற்றும் 46 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இந்தியாவின் புது டில்லியில் இருந்து ஶ்ரீலங்கன் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சுங்க அதிகாரிகள் அவர்களிடம் இருந்து 300 கெரட் எடையுள்ள ‘புஷ்பராக’ மற்றும் ‘நில்குருவிந்த’ வகையைச் சேர்ந்த 54 இரத்தினக் கற்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பணிப்பாளர் திலினி பீரிஸின் அறிவுறுத்தலின் பேரில், விமான நிலைய துணை சுங்கப் பணிப்பாளர் ரோஹன் பெர்னாண்டோவின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *