காணாமல் போன 15 வயது சிறுவன்

ByEditor 2

Jan 31, 2025

ஜனவரி 2ஆம் திகதி முதல் காணாமல் போன 15 வயது ஜாசன் மொஹம்மத் என்ற சிறுவனை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவன் ஜனவரி மாதம் 02 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஜனவரி 4 ஆம் திகதி களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் அவரது தாயார் அளித்த முறைப்பாட்டின்படி, அவர் காணாமல் போனது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

குறித்த புகைப்படத்தில் உள்ள சிறுவன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் 071 – 8591691, 034-2222222 அல்லது 034-2222223 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *