கொழும்பிற்கும் வெல்லவாயவிற்கும் இடையில் ICE போதைப்பொருள் கடத்திய நான்கு சந்தேக நபர்களை தனமல்வில பொலிஸார் கைது செய்துள்ளனர்.
20 மற்றும் 30 வயதுடைய சந்தேகநபர்கள், 1 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை ஆசன வாயில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் நால்வரும் வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.