ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான காதலர்களின் மோசமான செயல்

ByEditor 2

Jan 30, 2025

கம்பஹாவில் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான ஆணும் பெண்ணும் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பதிவாகி உள்ளது.

எண்டேரமுல்ல பிரதேசத்தில் இளம் பெண்ணும், அவரது காதலன் என அடையாளப்படுத்தப்படும் இளைஞனும் சேர்ந்து தங்கள் வீட்டில் கொள்ளையடித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனும் அவரது காதலியும் சேர்ந்து அவரது வீட்டிலிருந்து 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட 56 பவுண் தங்கம் மற்றும் 200,000 ரூபா பணத்தையும் திருடியுள்ளனர்.

20 வயதுடைய பெண்ணும் 25 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டுள்ளதாக எண்டேரமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளம் பெண் எண்டெரமுல்ல, பகுதியை சேர்ந்தவர் எனவும் இளைஞன் களனி, சிங்கரமுல்ல பகுதியை  சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் அடகு வைத்து, 1,800,000 மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை ஒன்றை சந்தேக நபர்கள் கொள்வனவு செய்திருந்த நிலையில் பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.

அத்துடன் பெறுமதியான கணனி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *