திம்புலாகல குடாவெவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது நெல் அறுவடையை ஒரு லொறியில் ஏற்றிச்சென்று பொலன்னறுவையில் உள்ள மூன்று நெல் ஆலைகளுக்கு வழங்க முயன்ற போதிலும், அவர்கள் எவரிடமிருந்தும் குறைந்தபட்சம் 118 ரூபாவுக்கு கூட நெல்லை வாங்க யாரும் முன்வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து நெல் வயலுக்கு அவசியமானவற்றை மேற்கொண்டுள்ளதாகவும், எனவே, இந்த நெல் தொகையை விற்பனை செய்யாவிட்டால், வீட்டில் உணவு கூட இருக்காது என்றும் குறிப்பிட்டார்.