கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக அரிசி விற்பனை செய்ததற்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை ஒரு மில்லியன் ரூபா என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத தெரண ‘BIG FOCUS’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதிகாரசபையின் பணிப்பாளர் அசேல பண்டார இதனைத் தெரிவித்தார்.
ஜனவரி மாதத்தில் மட்டும் அதிக விலைக்கு அரிசி விற்ற 220 வியாபாரிகள் மீது நுகர்வோர் விவகார அதிகாரசபை வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் (28) புறக்கோட்டையில் உள்ள சில்லறை வர்த்தகர் ஒருவருக்கு 7.5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.