மறைந்த மாவையின் இறுதிக் கிரியை

ByEditor 2

Jan 30, 2025

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2) மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 8 மணிக்கு இடம்பெறவுள்ளது.

பின்னர், காலை 10 மணிக்கு அஞ்சலி உரைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று, மதியம் ஒரு மணியளவில் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

இன்று (30) காலை மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு மத தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான சேனாதிராஜா, யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (29) காலமானார்.

உயிரிழக்கும் போது மாவை சேனாதிராஜாவுக்கு வயது 82 என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *