பிரியந்த மாயாதுன்னேவுக்கு பிணை

ByEditor 2

Jan 30, 2025

இன்று (30) கைது செய்யப்பட்ட பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2 இலட்சம் ரூபா கொண்ட சரீர பிணையில் அவரை விடுவிப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு குருநாகலில் சர்வதேச கூட்டுறவு தினத்தைக் கொண்டாடுவதற்காக நடைபெற்ற ‘இசுரு சவிய’ கொண்டாட்டத்திற்காக கூட்டுறவு நிதியிலிருந்து பணம் செலவிட்டதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் அவர் மீது விசாரணை மேற்கொண்டது.

விசாரணை அறிக்கையை சட்டமா அதிபரிடம் அனுப்பிய பின்னர், சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவித்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த சந்தர்ப்பத்தில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றிய பிரியந்த குமார மாயாதுன்னே, இன்று குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *