உலகிலேயே மிகவும் நீளமான ரயில் சேவைகள்

ByEditor 2

Jan 29, 2025

எந்தவொரு நாடும் அதன் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை அதிகரிக்க ரயில்வே சேவை மிகவும் முக்கியமானது. பயணிகள் ஏற்றி செல்ல மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு போன்றவற்றிற்கு இரயில்வே எளிதான மற்றும் சிக்கனமான ஒரு வழியாகும்.

நாட்டின் ஒரு பெரியளவு நிலத்தை கொண்டு இந்த சேவை உலகமெங்கும் கொண்டு செல்லப்படுகின்றது. உலகில் பொருளாதாரத்தின் அடிப்படையில் எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் அது ரயில்வே சேவையை பெரிதளவில் எப்போதும் கொண்டுள்ளன.

இதில் எந்தெந்த நாடுகளில் மிகப்பெரிய ரயில் வலையமைப்பை கொண்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

ரயில்வே நெட்வொர்க்குகள்

பிரேசில்இங்கு 37,743 கிமீ நீளமுள்ள இரயில் வலையமைப்பைக் கொண்டுள்ளது. இதன் கட்டுதான பணிகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமானது. இதில் தற்போது புதிய அமைக்களும் இணைக்கபட்டுள்ளது. 
ஆஸ்திரேலியாஆஸ்திரேலிய ரயில் பாதைகளின் நீளம் தோராயமாக 40 ஆயிரம் கிலோமீட்டர்கள். இங்கு சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் இந்நாட்டு அரசு கவனம் செலுத்தி வருகின்றது.
ஜெர்மனிஇங்கே உள்ள இரயில்கள் Deutsche Bahn என்றும் அழைக்கப்படுகின்றன. இந்நாட்டு ரயில்வே வலையமைப்பின் நீளம் சுமார் 43,468 கிலோமீட்டர் ஆகும்.இது உலகின் 6 வது மிக நீளமான ரயில்வே நெட்வொர்க் ஆகும். இங்கு சுமார் 21 ஆயிரம் கிலோமீட்டர் ரயில் பாதைகளில் மின்சாரம் காணப்படுகின்றது. 
கனடாகனடாவில் இந்த ரயில் சேவை அந்நாட்டு பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காக காணப்படுகின்றது. கனடிய இரயில்வே முதன்மையாக சரக்கு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது.இங்கு 50 ஆயிரம் கிலோமீட்டர் நீள ரயில் பாதைகள் உள்ளன.இங்கே குறைந்த மக்கள் தொகை இருப்பதால் ரயில் சேவை சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. 
இந்தியாஇந்தியாவில் 70 ஆயிரம் ரயில் பாதை நீளம் கொண்ட இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே அமைப்பாகும். தினமும் சுமார் 2.5 கோடி மக்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஏற்றிச் செல்கிறது. 
ரஷ்யாரஷ்யாவின் ரயில்வே நெட்வொர்க் 86 ஆயிரம் கிலோமீட்டர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகின் மிக நீளமான ரயில் பாதை என்ற சாதனையை இந்த நாடு பெற்றுள்ளது.இங்கே அதிகளவில் சரக்கு போக்குவரத்து செய்யப்படுகின்றது. ரஷ்யாவின் பொருளாதார செழிப்பில் ரயில்வே முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளது.          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *