இலங்கையில் காற்றின் தரக் குறியீடு இன்று முழுவதும் 58 முதல் 120 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், கொழும்பு, காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு சற்று ஆரோக்கியமற்ற நிலை வரை அதிகரிக்கக்கூடும் எனவும் அதே நேரத்தில் பிற பகுதிகளில் மிதமான மட்டத்தில் இருக்கும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.