நாளை முதல் மூடப்படும் வீதிகள்

ByEditor 2

Jan 28, 2025
FILE - Traffic is seen as the U.S. Freeway 101 is closed near Montecito, Calif., on Jan. 9, 2023. Traffic crashes in the U.S. cost society $340 billion in one year, or just over $1,000 for each of the country's 328 million people, according to a study by safety regulators Tuesday, Jan. 10. (AP Photo/Ringo H.W. Chiu, File)

77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறவுள்ள ஒத்திகை நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு போக்குவரத்து பிரிவு விசேட அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

குறித்த ஒத்திகைகள் நடைபெறும் நாட்களில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில வீதிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒத்திகை இடம்பெறும் திகதிகள் மற்றும் நேரங்கள் பின்வருமாறு…

2025.01.29 காலை 06.00 மணி முதல் 12.00 மணி வரை
2025.01.30 காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
2025.01.31 காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
2025.02.01. 06.00 மணி முதல் 12.00 மணி வரை
2025.02.02. 06.00 மணி முதல் 12.00 மணி வரை

இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளில் தற்காலிகமாக மூடப்படும் வீதிகள் பின்வருமாறு…

கருவாத்தோட்டம் விஜேராம மாவத்தையிலிருந்து வித்யா மாவத்தை நோக்கி பிரவேசித்தல்.

கருவாத்தோட்டம் பௌத்தலோக மாவத்தையிலிருந்து மெட்லன்ட் பகுதிக்குள் பிரவேசித்தல்.

கருவாத்தோட்டம் பௌத்தலோக மாவத்தையிலிருந்து பிரேம கீர்த்தி டி அல்விஸ் மாவத்தை நோக்கி பிரவேசித்தல்.

கருவாத்தோட்டம் ஸ்டென்லி விஜேசுந்தர மாவத்தையிலிருந்து மன்றக் கல்லூரி வீதி நோக்கி பிரவேசித்தல்.

கருவாத்தோட்டம்  சுதந்திர சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்கம் நோக்கி பிரவேசித்தல்.

கருவாத்தோட்டம்   ஹோர்டன் பிளேஸில் உள்ள மெட்லன்ட்  கிரசன்ட் சந்திப்பிலிருந்து சுதந்திர சுற்றுவட்டத்திற்கு பிரவேசித்தல். 

கருவாத்தோட்டம் ஆர்.ஜி. சேனாநாயக்க மாவத்தையிலிருந்து, மெட்லன்ட்  கிரசன்ட் வழியாக  சுதந்திர சுற்றுவட்டத்திற்கு பிரவேசித்தல். 

கருவாத்தோட்டம்  தனிவழிப்பாதையில் இருந்து மெட்லன்ட்  கிரசன்ட் நோக்கி பிரவேசித்தல்.

ஒத்திகை காலத்தில் இந்த வீதிகள் மூடப்படும் எனவும்,  அந்தப் பகுதியில் உள்ள அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் ஒத்திகைப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பயணிக்க இடமளிக்கப்படும் என கொழும்பு போக்குவரத்து பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *