விசேட போக்குவரத்து திட்டம்

ByEditor 2

Jan 27, 2025

77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறவுள்ள ஒத்திகை பணிகள் குறித்து கொழும்பு போக்குவரத்து பிரிவு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறித்த ஒத்திகை நடைபெறும் நாட்களில் சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த  பிரிவு அறிவித்துள்ளது.

ஒத்திகை இடம்பெறும் திகதிகள் மற்றும் நேரங்கள்

2025.01.29 காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

2025.01.30 காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

2025.01.31 காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

2025.02.01 காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

2025.02.02 காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

இந்த விசேட போக்குவரத்து திட்டத்திற்கு அமைய மேற்குறிப்பிடப்பட்ட திகதிகளில் மூடப்படவுள்ள வீதிகளின் விபரம் பின்வருமாறு

கருவாதோட்டம் விஜயராம மாவத்தையில் கல்லுாரி மாவத்தை திசைக்கு நுழைதல்

கருவாதோட்டம் பெளத்தாலோக்க மாவத்தையில் இருந்து மெட்டிலன்ட் பிரதேசத்திற்கு நுழைதல்

கருவாதோட்டம் பெளத்தாலோக்க மாவத்தையில் இருந்து பிரேம கீர்த்தி டி அல்விஸ் மாவத்தை திசைக்கு நுழைதல்

கருவாதோட்டம் ஸ்டென்லி விஜயசுந்தர மாவத்தையில் இருந்து மன்றக்கல்லுாரி வீதி திசைக்கு நுழைதல்

கருவாதோட்டம் சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்க திசைக்கு நுழைதல்

இந்த வீதிகள் ஒத்திகை இடம்பெறும் காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்படவுள்ளதுடன், தேவைக்கு ஏற்பட அந்த பிரதேசத்தில் காணப்படும் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு ஒத்திகையால் பாதிப்பு ஏற்படாத வகையில் வழியமைக்கப்படும் என கொழும்பு போக்குவரத்து பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *