இசை நிகழ்ச்சிகள் தொடர்பில் கலந்துரையாடல்

ByEditor 2

Jan 25, 2025

இரவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளின் நேரம் குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சால் கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சிகளையோ அல்லது அவற்றின் நேரத்தையோ நிறுத்த அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், நீதிமன்ற தீர்ப்புகளின்படி மட்டுமே அது செயற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) பிற்பகல் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

2005/38 நீதிமன்றத் தீர்ப்பு ஊடாக பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் விதம் தொடர்பில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

அந்த தீர்ப்பின்டி 2007/2008 பொலிஸ் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாகவும், அது 2010 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்

சுற்றுலாத் துறைக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையில் இந்தத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறிய அமைச்சர், நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அரசாங்கம் பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது என்றும் கூறினார்.

இந்த வருடம் கடந்த 22 நாட்களில் 177,403 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *