வலிப்பு நோயால் உயிரிழந்த யுவதி

ByEditor 2

Jan 25, 2025

பதுளை தியத்தலாவை வைத்தியசாலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட தனது மகளின் மரணத்திற்கு வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என்று பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

துல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தேவ்மினி சமத்கா என்ற யுவதியே இவ்வாறு இதன்போது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த யுவதி கடந்த 17 ஆம் திகதி வலிப்பு நோய் காரணமாக பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு

பின்னர் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படாமல் உடல்நிலை மோசமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாலும், உடனடியாக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படாததாலும், தனது மகள் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *