​​போதைப்பொருளுடன்  சந்தேக நபர் ஒருவர் கைது

ByEditor 2

Jan 25, 2025

குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவினரால் நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ​​போதைப்பொருளுடன்  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் விமலசிறி டி மெல் மாவத்தை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், போதைப்பொருள் உள்ளிட்ட பெருமளவிலான சொத்துக்களுடன்  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை, சேனாநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள்

03 கிலோ 349 கிராம் ஹேஷ் போதைப்பொருள் 
25 கிராம் குஷ் போதைப்பொருள் 
30 கிராம் மென்டி போதைப்பொருள் 
320 போதை மாத்திரைகள்
129 போதை முத்திரைகள்
01 வாயு கைத்துப்பாக்கி
02 வாள்கள்
01 பொலிதீன் சீலர்
05 மின்னணு தராசுகள்
போதைப்பொருளை பொதியிட பயன்படுத்தும் 4,000 பெக்கெட்டுகள்
பணம் 1,250/=
கைப்பேசி ஒன்று
மோட்டார் வாகனம் ஒன்று

விசாரணையில், சந்தேக நபர் ஒரு போதைப்பொருள் வியாபாரி என்பதும், தடுப்புக் காவலில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் போதைப்பொருளை விநியோகித்து வருவதும் தெரியவந்துள்ளது.

கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *